இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா
In இலங்கை December 3, 2020 9:11 am GMT 0 Comments 1701 by : Yuganthini

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழுநிலை விவாதத்தில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமாகும்.
நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது.
யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணமாகும்.
மேலும், இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.சுமார் ஐந்து அல்லது ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.
ஆனாலும், 270,000 பேரை பாதுகாக்க முடிந்தது.பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.