இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததை கிறிஸ்மஸ் நினைவுப்படுத்துகிறது – பிரதமர்
In இலங்கை December 25, 2020 3:08 am GMT 0 Comments 1470 by : Dhackshala
கிறிஸ்மஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும்.
இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும்.
ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஆன்மீக ரீதியில் மனதை ஈடுபடுத்தும் ஒரு ஆழமான விடயம் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன” எனவும் பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.