இலங்கைக்காக பரிஸில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை
In ஆசிரியர் தெரிவு April 22, 2019 2:35 am GMT 0 Comments 2951 by : Varshini
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
இலங்கையர்களுக்காக நேற்றிரவு ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு பிரார்த்தனை இடம்பெற்றது. இந்நிலையில், பரிஸில் வாழும் இலங்கை சமூகத்தினர், அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தித்துள்ளனர்.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுதாக்குதல்களில் இதுவரை 228 பேர்வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 450 பேர்வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளடங்குவதோடு, 30 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை தொடர்ந்து சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதோடு, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று காலை நீக்கப்பட்டது.
இதேவேளை, தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று இரவுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம