இலங்கைக்கான புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தியது குவைட்
In இலங்கை February 14, 2021 6:45 am GMT 0 Comments 1267 by : Dhackshala

குவைட் பட்ஜெட் கேரியர் ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனம் இலங்கையின் தலைநகருக்கு ஒரு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய கிழக்கில் விமான சேவை வழங்கும் இடங்களுக்கான இணைப்புகளுடன் குவைட் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்காக ஜசீரா ஏயர்வேஸ் தனது விமானத்திலும் குவைட்டில் உள்ள ஜசீரா டெர்மினல் டி 5 யிலும் ஒவ்வொரு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
குறித்த விமான அட்டவணையின்படி, J9 551 செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குவைட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2.35 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
விமானம் J9 551 திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பிலிருந்து அதிகாலை 3.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.05 மணிக்கு குவைத்தில் தரையிறங்கும் என ஜசீரா தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.