நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு குவைத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் கோரிக்கை
In இலங்கை November 10, 2020 8:34 am GMT 0 Comments 1341 by : Dhackshala
இலங்கைக்கு தங்களை விரைவில் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு குவைத் நாட்டில் அரச பாதுகாப்பு வளாகம் ஒன்றில் நிர்கதியாகியுள்ள இலங்கை பணிப் பெண்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய காணொளி பதிவொன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தங்களது பணிக்காலம் நிறைவடைந்துள்ள போதிலும் சுமார் 70 பணியாளர்கள் கடந்த 7 மாதங்களாக நிர்கதியாகியுள்ளதாக அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு அடிப்படை வசதிகளும் தங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்காத நிலையில், பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பணியாளர்கள் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே தங்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வருதவற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என குவைத்தில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள் கோரியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.