இலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்
In இலங்கை November 26, 2020 7:56 am GMT 0 Comments 1363 by : Dhackshala

இலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கருத்திற்கொண்டே இந்த கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஆசிய அபிருத்தி வங்கி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பெண்கள் மற்றும் தேயிலை சிறு உரிமையாளர்கள் தலைமையிலான வணிகங்கள் உட்பட, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது
மேலும் கொரோனா நெருக்கடியினால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால், ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் தேவை மற்றும் விநியோக சங்கிலி சீர்குலைவு காரணமாக இது பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளதுடன், இது படிப்படியாக ஏனைய துறைகளிலும் பரவியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை புதுப்பிக்க இந்த நிதியுதவி முக்கியமானதாக அமையும் என கொழும்பில் உள்ள ஆசிய அபிருத்தி வங்கி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.