இலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்!
In ஆசிரியர் தெரிவு February 3, 2021 2:52 am GMT 0 Comments 1473 by : Dhackshala

கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி முதல் கட்டத்தில் 30 வீத தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.