இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை
In இலங்கை February 10, 2021 4:55 am GMT 0 Comments 1294 by : Dhackshala

இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு அடுத்த மாதளவில் கொவிஷீல்ட் அஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.
அத்துடன் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஊடகவியலாளர்களுக்கும் கொவிஷீல்ட் அஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.