இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு வழங்கப்பட்டது!

2020 ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
பேராதனையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விருதுக்காக வருடந்தோறும் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை முதன்முதலாக தமிழர் ஒருவர் இவ்வருடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெங்காயம், மிளகாய், நிலக்கடலை, குரக்கன், கோதுமை போன்ற பயிர்களில் புதிய இனங்களை கண்டுபிடித்தமைக்காக கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி அரசகேசரிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கல் நிகழ்வில் விவசாய அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர், விவசாயப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.