இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இலங்கை February 14, 2021 2:00 am GMT 0 Comments 1244 by : Yuganthini

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 6பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவர், அங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்உயிரிழந்துள்ளார்.
நாராங்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண்ணொருவர், அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.