இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 11ஆம் திகதி அகலவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது இறப்புக்கு கொரோனா வைரஸ் தாக்கத்துடன் அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கோன பகுதியில் 86 வயதான பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு, கொரோனா வைரஸ் தாக்கத்துடன், அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண்ணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா தாக்கமே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு தெற்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்புக்கு, கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா தாக்கமே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வத்துபிட்டிவல பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.