இலங்கையுடன் பலமான கூட்டை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பு – அமெரிக்கா
In இலங்கை April 14, 2019 5:13 am GMT 0 Comments 2230 by : Dhackshala

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், மக்களுக்கிடையிலான பரந்துபட்ட கூட்டு, ஜனநாயக கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு, நிலையான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் அடிப்படையில் இலங்கையும் அமெரிக்காவும் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டு மேலும் கட்டியெழுப்பப்படுவதையும் எதிர்வரும் ஆண்டின் சவால்களைத் தொடர்ந்து சமாளிக்கவும், தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு பாதுகாப்பான, செழிப்பாள புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா
-
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
-
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக
-
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி
-
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
-
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர