இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
In இலங்கை February 10, 2021 9:54 am GMT 0 Comments 1348 by : Dhackshala

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் விமான பயணத்தின்போது எயார் பபிள் (air bubble) என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான விமான போக்குவரத்துக்கள் இயங்கும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் இது தொடர்பான திட்டங்களை வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சகங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் சுகாதார விதிமுறைகளின்படி இந்த திட்டத்தை நடத்துவதில் இரு நாடுகளின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டால், திட்டத்தைத் தொடங்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.