இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட வேண்டும்: இந்தியப் பிரதமர்
In இலங்கை February 4, 2021 3:54 am GMT 0 Comments 1353 by : Dhackshala
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த உறவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா நோய்க்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.