இலங்கை குண்டுத்தாக்குதல்கள் – 2 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்த இந்தியா?
In இலங்கை April 24, 2019 6:02 am GMT 0 Comments 2318 by : Dhackshala

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் என்.டீ.ரி.வி ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினரை தொடர்பு கொண்ட இந்திய புலனாய்வு பிரிவினர், இந்த விடயத்தை அறியப்படுத்தி இருந்தனர் என இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கடந்த சனிக்கிழமை இரவும், இந்தியத் தரப்பினரால், ஒரு முன் எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டிருந்தது என இலங்கை தரப்பு தகவலொன்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் மாதம் 4ஆம் மற்றும் 20ஆம் திகதிகளிலும் குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் இந்திய புலனாய்வு பிரிவினரால், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விடயங்கள் குறித்து, இலங்கை இந்திய அரச தரப்பில் எவ்வித உத்தியோகபூர்வ பதில்களும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்