இலங்கை குண்டு வெடிப்பு – ரியாஸின் அதிர்ச்சிதரும் முகநூல் பதிவுகள்!
In இந்தியா May 2, 2019 5:48 am GMT 0 Comments 2351 by : Krushnamoorthy Dushanthini

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு குறித்து இந்தியாவின் கேரளாவில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரின் முகநூல் பதிவுகள் வெளியாகியுள்ளன.
குறித்த பதிவில் சிரியா பற்றிய வாசகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இஸ்லாம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இஸ்லாமியர்களை கொலை செய்யலாம். ஆனால் இஸ்லாத்தை கொலை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனுடன் இணைந்து ஏராளமான ஒளிப்படங்களையும் பதிவு செய்துள்ள அவர், தன் மனதில் இருக்கும் கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இவருடைய கருத்துக்கள் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்க தலைவரின் கருத்துக்களை தொடர்ச்சியாக கேட்டுவந்ததாகவும், அதன் அடிப்படையில் கேரளாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத
-
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்