இலங்கை சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது- ரஷ்யா
In இலங்கை January 30, 2021 3:37 am GMT 0 Comments 1457 by : Yuganthini
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமானதாகவே காணப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை நாம் உயர் மட்டத்தில் பேணி வருகின்றோம்.
மேலும் ரஷ்யாவின் தேயிலை இறக்குமதித் துறையில், இலங்கை பாரிய பங்காற்றி வருகின்றது” என மரியா ஜாகரோவா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.