இலங்கை வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த விமான சேவைகள் இரத்து
In இலங்கை December 25, 2020 8:50 am GMT 0 Comments 1951 by : Dhackshala

இலங்கைக்கு நாளை (சனிக்கிழமை) வருவதற்கு திட்டமிட்டிருந்த சுற்றுலா குழுக்களுடனான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரத்து செய்யப்படும் என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையங்கள் மீண்டும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்தோடு, முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது
அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய விமானங்கள் நாளை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐரோப்பா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.