இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்!
In ஆசிரியர் தெரிவு December 18, 2020 5:45 am GMT 0 Comments 1611 by : Benitlas

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.