இலாபம் ஈட்டிய நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டம் – சண்டே டைம்ஸ்
In இங்கிலாந்து February 7, 2021 8:45 am GMT 0 Comments 1948 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி மற்றும் அதிக இலாப வரிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக ஆண்டின் இரண்டாம் பாதியில் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏப்ரல் மாத நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 271 பில்லியன் பவுண்டுகள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இருப்பினும் சண்டே டைம்ஸ் வெளியிட்ட குறித்த செய்திகுறித்து நிதி அமைச்சு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.