இஸ்ரேலில் ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி!

ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
இத்தகவலை பிரதமர் அலுவலகமும், சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது.
அதேசமயம் இஸ்ரேலுக்கு வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல்களை ஒப்பந்தம் செய்யும் பணி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிற நாடுகளில் பரவத் தொடங்கியதால், அந்த நாடுகளில் இருந்து இஸ்ரேலில் வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்காரணமாக, நாட்டின் பிரதான நுழைவு வாயிலாக கருதப்படும், பென் குரியான் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர் கொரோனா நிலவரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரின் புதிய திட்டங்களை பரிசீலனை செய்த அமைச்சரவை, விமான பயணிகள் தொடர்பான இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.