இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல்!

இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது என்று மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம் குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
இஸ்ரேலின் அரசாங்கம் ஜெருசலேமை அதன் தலைநகராக கருதுகிறது, இருப்பினும் இது சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதி அங்கீகரிக்கப்படவில்லை. பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவில் உள்ளன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.
ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப் போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்தது.
அதன் பயனாக இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சவுதி அரேபியா வழியாக விமானப்போக்குவரத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தலைநகரில் தூதரகத்தை அமைக்கவும் அமீரகம் திட்டமிட்டது.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் நாட்டில் தனது தூதரகத்தை அமைக்க அந்நாடு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அடியை பின்பற்றி இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த ஒப்புக் கொண்டன. ஆனால், பாலஸ்தீனியர்கள் இந்த ஒப்பந்தங்களை ‘முதுகில் குத்துவதாக’ கண்டனம் செய்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.