ஈராக்குடன் எரிவாயு – சக்திவள வர்த்தகம் – ஈரான் இணக்கம்

ஈரான் மற்றும் ஈராக்கிற்கு இடையிலான எரிவாயு மற்றும் சக்திவள வர்த்தகத்தை விரிவாக்கவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இதற்காக 20 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு விஜயம் செய்துள்ள ஈராக் பிரதமரை இன்று (சனிக்கிழமை) ஈரான் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு, எண்ணெய் ஏற்றுமதியையும் மேற்கொள்ளவுள்ளதாக ரௌஹானி கூறியுள்ளார்.
தெஹ்ரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் கொள்வனவு செய்ய ஈராக்கிற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ரயில் மார்க்கத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ரௌஹானி இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்
-
மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட
-
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத
-
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக
-
நவம்பர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் பணிகளை நிறைவுசெய்யும் நோக்கில், தடுப்பூசி திட்டம
-
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட ந
-
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு இரண்டு வார
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு
-
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்