ஈரானிய மரணதண்டனை ‘காட்டுமிராண்டித்தனமானது’ – பிரான்ஸ் கண்டனம்
In ஐரோப்பா December 13, 2020 4:22 am GMT 0 Comments 1895 by : Jeyachandran Vithushan

பாரிஸ் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டை விதித்தமையானது, தெஹ்ரானின் சர்வதேச கடமைகளுக்கு எதிரானது என பிரான்ஸ் நேற்று (சனிக்கிழமை) கடுமையாக சாடியுள்ளது.
ஈரானில் இந்த தீவிரமான கருத்து வெளிப்பாடு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயலை பிரான்ஸ் மிகக் கடுமையான வகையில் கண்டிக்கிறது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் இது நாட்டின் சர்வதேச கடமைகளுக்கு எதிரானது என்றும் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.