உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்
In ஆசிரியர் தெரிவு January 18, 2021 8:19 am GMT 0 Comments 1623 by : Dhackshala

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் பயணிகள் விமானம் உக்ரைன் நாட்டில் இருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன் பின்னர் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டங்கட்டமாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.