சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
In இலங்கை December 28, 2020 6:28 am GMT 0 Comments 1412 by : Yuganthini
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே உமது பலத்தை சிறுபான்மையின் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு, இலங்கை அரசே ஜனாசாக்களை எரிக்காதே, ஜனாசாக்களில் இன வாதம் வேண்டாம் என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.