உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் 25ஆம் திகதி முதல் ஆரம்பம்
In இலங்கை November 19, 2020 3:25 am GMT 0 Comments 1394 by : Dhackshala

2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.