உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – ஆதிதிராவிடர் கூட்டமைப்பு வலியுறுத்து!
In இந்தியா May 9, 2019 5:40 am GMT 0 Comments 2312 by : Krushnamoorthy Dushanthini

புதுச்சேரி மாநில ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும் என ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
இது குறித்த தீர்மானம் புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில், புதுச்சேரி ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை ஆதிதிராவிடர் கூட்டமைப்பு வரவேற்பதுடன், அதனை ஏற்று ஆளுநர் பதவி விலக வேண்டும்.
அத்துடன், ஆளுநர் கிரண்பேடி நியமித்த 3 அமைச்சர்களின் நியமனத்தை ரத்துச் செய்வதோடு, அவர்களுக்கு வழங்கிய சம்பளத்தையும் மீளப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த கூட்டத்தில் நகர தலைவர் ஆதிகேசவன், கொள்கைபரப்புச் செயலாளர் இளையபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத