உலகக்கிண்ண தொடரில் விளையாட தயார்: குசல் பெரேரா

உலகக்கிண்ண தொடரில் விளையாட தயாராகவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.
உபாதையிலிருந்து மீண்டு, மீண்டும் தனது உடற் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் குசல் ஜனித் பெரேராவிடம், உலகக்கிண்ண தொடரில் நீங்கள் விளையாட தயாரா என கேட்ட போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நான் உடல் தகுதியை நல்ல நிலைக்கு கொண்டுவர மீண்டுவரும் பயிற்சிகளை ஆரம்பித்து 3 வாரங்கள் ஆகிறது. நினைத்ததை விடவும் வேகமாக குணமாகி வருகிறேன். அடுத்த வாரம் நான் ஓட ஆரம்பிப்பேன். இரண்டு, மூன்று வாரங்களில் துடுப்பெடுத்தாட முடியும் என்று நான் நினைக்கிறேன்
உண்மையிலேயே அதிக கவலை தருகிறது. எனது இரு கால்களிலும் உபாதை நிலை இருந்தது. நான் கடைசி இரண்டு ஆண்டுகளில் சில போட்டிகளில் விளையாடுகிறேன் அதற்கு பின்னர் உபாதைக்கு உள்ளாகி இருக்கிறேன். நான் பல உடற் தகுதி பயிற்சியாளர்களுடன் இணைந்து செயற்படுகிறேன்.
தற்போது பிரச்சினைகள் குறைவு. ஆனால் போட்டி ஒன்றில் விளையாடும்போது எந்த நேரத்தில் உபாதைக்கு உள்ளாவேன் என்று கூற முடியாது. தான் உடற்தகுதியுடன் இருக்கிறேன் என்பது அந்த இடத்திற்கு பொருந்தாது.
போட்டி ஒன்றின்போது ஓடுவதற்கு, பாய்வதற்கு வேண்டி இருக்கும். உடலைப் பற்றி நினைத்துக் கொண்டு போட்டியில் விளையாட முடியாது. ஏனென்றால் அந்த நேரத்தில் செய்ய வேண்டியது தானாக இடம்பெறுகிறது.
அதிக நேரங்களில் உண்மையிலேயே துரதிஷ்டமானது. ஏனென்றால் எனது உடற் தகுதியை மாத்திரம் எடுத்துப் பார்த்தால் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே இவ்வாறு உபாதைக்கு உட்படுகிறேன். நாம் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்ததே இங்கு இருக்கும் சிக்கலாகும். என்றாலும் இம்முறை உலகக் கிண்ண தொடரை எடுத்துக் கொண்டால் எங்களிடம் அதிக எதிர்பார்ப்பு இல்லாததால் எம்மால் பெரிய மாற்றம் ஒன்றை செய்ய முடியும் என்று நாம் நினைக்கிறோம். நாம் அனைவரும் எமது தனிப்பட்ட திறமையை அதிகரித்துக் கொண்டு விளையாடினால் இந்த தோல்விகளில் இருந்து மீள முடியும்.
எனக்கு உலகக்கிண்ண தொடரில் விளையாடும் சந்தர்ப்பம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எப்படி வேகமாக குணமாகி வருவது என்றே நான் பார்க்கிறேன். உலகக் கிண்ண தொடருக்கு நான் செல்வேனா என்று என்னால் கூற முடியாது. ஏனென்றால் என்னால் முடிந்தது உடற் தகுதி பெற்று போட்டியில் விளையாடும் திறனை பெறுவது மாத்திரமே. தேர்வுக் குழு தான் உலகக் கிண்ண அணியை தேர்வு செய்கிறது. எனவே, அவர்கள் தான் செல்கின்ற இறுதி அணியை தேர்வு செய்கின்றனர். நான் என்னால் முடிந்ததை செய்கிறேன். உலகக் கிண்ண தொடரிற்கு செல்லுமாறு தேர்வுக் குழு கூறினால் நான் செல்லத் தயார்” என கூறினார்.
இதுவரை 88 போட்டிகளில் விளையாடியுள்ள 28 வயதான குசல் பெரேரா, 2514 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஓட்டம் 135 ஆகும். சராசரி 28.9 ஆகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.