உலகத் திரையரங்குகளை அதிரவைக்கப் போகும் “Avengers: Endgame” நட்சத்திர சந்திப்பு!
In சினிமா April 9, 2019 10:00 am GMT 0 Comments 1441 by : adminsrilanka
ஹொலிவூட் திரையுலகின் மகுடம் சூடிய பிரம்மாண்ட திரைக்காவியமான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இறுதி கட்ட யுத்தபாணியிலான கதையை நிறைவு செய்துள்ள மாவல் சினிமாடிக் யுனிவர்ஸ் நிறுவனம் அதன் வௌியீட்டுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்பொருட்டு திரைப்படத்தில் பங்கேற்ற நட்சத்திரங்களுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதுடன், விரிவாக்க பணிகளையும் அந்த நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
டவுன்ரவுன் – லொஸ் ஏஞ்சலீஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடந்த பாகமான இன்பினிட்டி வார் திரைப்படத்தில் தோன்றிய கதாபாத்திரங்கள் பங்கேற்றிருந்ததுடன், அதில் நகைச்சுவையாக ஒரு அம்சமும் இடம்பெற்றிருந்தது.
கடந்த பாகத்தின் இறுதியில் பஸ்பமாக காற்றித் கரைந்த கதாபாத்திரங்கள் முதலில் பங்கேற்காத நிலையில், ஆசனங்கள் பாதிக்கு மேல் வெறுமையாக இருந்தன. இன்பினிட்டி வில்லன் தோனோஸ் தனது முடிவற்ற மந்திர கையுறையை பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் காற்றில் கரைய வைத்திருந்தான்.
இதனை பிரதிபலிக்கும் முகமாக அந்த நடிகர்களின் ஆசனங்கள் வெறுமையாகவும், ஏனைய கதாநாயகர்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்து.
அத்துடன் தொக்கு நிக்கும் வகையில் நிறைவடைந்த Avengers: Infinity War திரைப்படம் அடுத்த பாகத்தின் மீது திரைப்பட ரசிகர்களுக்கு தீரா தாகத்தை ஏற்படுத்தியதுடன், அனுமதிச் சீட்டு முன்பதிவுகள் ஏற்கனவே பொக்ஸ் ஒபீஸ் சாதனையை நெருங்கிவிட்டன.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அயன் மேன் நடிகர் ரொபட் டொவ்னி ஜேஆர், பொழுதுபோக்கு அம்சங்களின் வரலாற்றில் சிறந்த பந்தயத்தை உருவாக்கியுள்ள அவென்சர்ஸ் திரைப்படங்களின் உரிமங்கள் தொடர்பாக விபரித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வசந்தகால வௌியீடாக வௌிவரயிருக்கும் “Avengers: Endgame” திரைப்படம் உலக திரைப்பட ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருக்கும் என்று அவர் நம்பிக்கை வௌியிட்டார்.
“தற்கால திரைப்பட ரசிகர்கள் மிகவும் தௌிவுள்ளவர்களாகவும், புத்திசாதுர்யம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். அத்துடன் முன்னைய சம்பவங்களை நினைவில் வைத்து அசை போடக் கூடியவர்கள். எனவே நாங்கள் புதிதாக சிந்திக்க வேண்டும்.
தொலைக்காட்சி தயாரிப்பாளர் ரூஸோஸூம் மாவல் கலையகத்தின் தலைவர் கெவினும் அதற்கான துல்லியமான ஆக்கங்களை படைக்க வேண்டும்” என்று டொவ்னி ஜேஆர் குறிப்பிட்டார்.
அதேவேளை, எறுப்பு மனிதன் போல் ரட் கடந்த வாரயிறுதியில் தனது 50 வது வயதை எட்டினார். அவருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்களும் இந்த செய்தியாளர் சந்திப்பின் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.