உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.இற்கு தைரியமுண்டா? – மைத்திரி கேள்வி
In ஆசிரியர் தெரிவு May 8, 2019 7:12 am GMT 0 Comments 3180 by : Dhackshala
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தைரியமுண்டா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கை மீது தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லையென தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்துவந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அமைப்பு தற்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கின்றதென்பதை உலகுக்கு காட்டவே, அண்மையில் சமாதானத்தை கட்டியெழுப்பிய இலங்கையை அவர்கள் தெரிவு செய்திருக்கலாமென தெரிவித்துள்ளார்.
உளவுத்துறைக்கு தாக்குதல்கள் குறித்த தகவல்கள் வந்தமை உண்மை என்றும் எனினும் அவர்கள் தனது கவனத்திற்கு அதனை கொண்டுவராது அவர்களும் அலட்சியமாக செயற்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதனாலே அவர்களின் பதவி பறிக்கப்பட்டதுடன் இந்த விடயம் தொடர்பாக ஆராய குழுவொன்றையும் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா