உலகின் மிகச் சிறிய ஓவியரின் படைப்பு 1000 அமெரிக்க டொலருக்கு விற்பனை!
In அமொிக்கா April 3, 2019 6:28 am GMT 0 Comments 2215 by : adminsrilanka
திறமைக்கும், கலைப்படைப்புகளுக்கும் வயது அளவோ, வயது எல்லையோ தேவையில்லை. அவ்வாறாகத்தான் அமெரிக்காசவைச் சேர்ந்த இரண்டு வயதான ஓவியக்கலைஞர் லோலா ஜூன் தனது படைப்புகளை மேற்கொண்டு வருகிறார். அவரது பிடித்தமான நிறங்கலவைகளை பயன்படுத்தி தன்னிச்சையாக தோன்றும் ஓவியங்களை தீட்டுகிறார்.
கொசோவோவை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல ஓவியர் பாஜ்தீம் ஓஸ்மானாஜ், அவளைக் கண்டுபிடித்த நாளில் இருந்து தனது ஓவியப் படைப்புகளை அவளிடம் ஒப்படைத்தார்.
அனைத்து உபகரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின்னர் ஓஸ்மானாஜின் வழிநடத்தலுடன் ஒரு கறுப்பு அக்ரிலிக் வண்ணப்பூச்சுக்குள் அவளை விட உயரமான ஒரு வண்ணப்பூச்சு தூரிகையை அழுத்தி அதை கென்வாஸ் மீது தௌித்து வர்ண ஜாலத்தை உருவாக்குகிறாள். ஓவியர் ஓஸ்மனாஜ், லோலா ஜூனின் தாயார் லுசிலி ஜேவியரின் நண்பராவார். அவரும் ஒரு சிகையலங்கார நிபுணராக பணியாற்றி வருகின்றார்.
அவர்கள் அனைவரும் இராப்போசனத்தில் கலந்து கொண்டிருந்த போது குழந்தை லோலா சில கிறுக்கல் ஓவியங்களை வர்ணம் தீட்டி தன்னிடம் காண்பித்து விரும்பம் கோரியதாக ஓவியர் ஓஸ்மனாஜ் தெரிவித்தார்.
அந்த ஓவியங்கள் பிரபல கலைஞர்களான Cy Twombly மற்றும் Joan Mitchell போன்றவர்களின் கிறுக்கல் ஓவியங்களை ஒத்ததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து விரைவிலேயே குழந்தைக்கு சில அக்ரிலிக் வர்ணக் கலவைகளையும், கென்வாஸ் ஓவிய தாள்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
லோலா ஜூன் இரண்டு தடவைகள் தனது கிறுக்கல் ஓவியங்களை நியுயோக்கில் உள்ள சாஷாமா கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.
முதலாவது காட்சிப்படுத்தலின் போது அவளின் ஓவியங்கள் 300 டொலர்கள் தொடக்கம் 1800 டொலர்கள் வரை விற்பனையாகியுள்ளன. ஓவியங்களை பார்வையிட வந்தவர்கள் ஒரே தடவையில் 4 க்கும் மேற்பட்ட ஓவியங்களை கொள்வனவு செய்தனர்.
அதன்பின்னர் இரண்டாவது காட்சிப்படுத்தல் கடந்த மார்ச் 18 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு ஓவியங்கள் விற்பனையாகியுள்ளன.
அவை 500 டொலர்கள் தொடக்கம் 2800 டொலர்கள் வரை விற்பனையாகியதுடன், அழகான ஆடு என்ற ஒரு ஓவியத்திற்கு மாத்திரம் 1500 டொலர்கள் விலை நிர்ணயம் ஆகியிருந்தமை சிறப்பம்சமாகும்.
இந்த கண்காட்சியின் போது மொத்தமாக 40 கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 32 ஓவியங்கள் விற்பனையாகியுள்ளன. இதுதான் எமதுக்கு கிடைத்த வெற்றி என்று ஓவியர் ஓஸ்மானாஜூம், லோலாவின் தாயார் லுசிலி ஜேவியரும் தெரிவித்தனர்.
அத்துடன் தனது புதல்விக்கு உறுதியான பார்வையும் அழகுணர்ச்சியும் நிரம்பவே இருப்பதாக லுசிலி ஜேவியர் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.