உலக சுகாதாரத்தின் மையப்புள்ளியாக இந்தியா – பிரதமர் மோடி

உலக சுகாதாரத்தின் மையப்புள்ளியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காணொளி தொடர்பாடல் மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வரும் புத்தாண்டில் சுகாதாரத் துறையில் இந்தியா மேலும் வலிமை பெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், புத்தாண்டில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்குப் போடும் பணிக்கான முன்னோட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்டமாக பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு ஏற்கனவே ஒத்திகை நடத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வரும் ஜனவரி இரண்டாம் திகதி நடைபெறுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவித்துள்ளார்.
இதன்படி முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.