உலக ரெலி கார்பந்தயம்: நான்காவது சுற்று முடிவு
In விளையாட்டு April 2, 2019 5:58 am GMT 0 Comments 2320 by : Anojkiyan
விறுவிறுப்பின் உச்சத்தை பரிசளிக்கும் உலக ரெலி கார்பந்தயத்தின் நான்காவது சுற்று நடைபெற்று முடிந்துள்ளது.
ஆண்டுக்கு 14 சுற்றுக்களாக பல்வேறு நாடுகளில் நடைபெறும் இந்த கார்பந்தயத்தின் நான்காவது சுற்றான டுவர் டி கோர்ஸ் பிரான்ஸில் நடைபெற்றது.
இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்.
இப்போட்டியில், 68 கார்பந்தய வீரர்கள் 19.34 கிலோமீற்றர் பந்தய தூரத்தை நோக்கி காரில் சீறி பாய்ந்தனர்.
ஏற்ற, இறக்கத்துடன் கூடிய கரடுமுரணான பாதையில், வீரர்கள் பந்தய தூர இலக்கை அடைய கடுமையாக போட்டி போட்டனர்.
இந்த கடுமையான போட்டியில், பெல்ஜியத்தின் ஹூண்டாய் அணியின் வீரரான தியரி நெயூவில் பந்தய தூரத்தை மூன்று நிமிடங்கள் 22.59 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.
இவரை தொடர்ந்து, பிரான்ஸின் செபாஸ்டியன் ஒஜியர், பந்தய தூரத்தை மூன்று நிமிடங்கள் 23:39.3 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இதனையடுத்து, பிரித்தானியாவின் எல்பின் எவன்ஸ், பந்தய தூரத்தை மூன்று நிமிடங்கள் 24:05.6 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு சுற்றுகளின் முடிவில், பெல்ஜியத்தின் ஹூண்டாய் அணியின் வீரரான தியரி நெயூவில் 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பிரான்ஸின் செபாஸ்டியன் ஒஜியர், 80 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து, எஸ்டோனியாவின் ஒட் டானக், 77 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.