உளவுத்துறை தகவல்கள் ட்ரம்புக்கு வழங்கப்படக் கூடாது: ஜோ பைடன்!

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது.
ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் ட்ரம்புக்கு அது தேவையில்லை. அவருக்கு எந்த மதிப்பீட்டின் உளவுத்தகவல்களை தெரிவிப்பது.
ட்ரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே கசியவிட்டு, அதுபற்றி ஏதாவது கமென்ட் அடிப்பதைத் தவிர, வேறு என்ன பலன் விளையப் போகிறது’ என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.