உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் – மோடி
In இந்தியா December 28, 2020 6:44 am GMT 0 Comments 1312 by : Krushnamoorthy Dushanthini

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் புத்தாண்டு தீர்மானமாக எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
நடப்பாண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ தற்சாா்பு இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம்’ என்ற இயக்கத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்தது.
அதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்தனா். அதேபோல்இ வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களையே பயன்படுத்துவோம் என்பதைப் புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்க வேண்டும்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் அந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். தொழில்முனைவோரும், நிறுவனங்களும் அதற்கு முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.