உள்ளூராட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் – மு.க.ஸ்டாலின் உறுதி
In இந்தியா January 30, 2021 10:41 am GMT 0 Comments 1490 by : Jeyachandran Vithushan

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளூராட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
வேலூர் மாவட்த்தில் இடமபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்கள், விவசாய கடன்கள், 5 சவரன் அளவுக்கு வைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அளித்தார்.
மக்கள் கோரிக்கைகளை, தன் முதுகில் ஏற்றி இருக்கிறார்கள் என்றும், அதை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவது நிச்சயம் என்றும் கூறினார்.
இதற்காக, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாகா ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் தன்னை கேள்விகேட்கலாம் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.