ஊழலை அழிப்பதே எமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி
In இலங்கை December 9, 2020 3:31 am GMT 0 Comments 1413 by : Dhackshala
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பது தமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக கருதுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சர்வதேச ஊழல் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை வலுவூட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பது தமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக கருதுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெரும்பான்மை பலத்துடன் தனது வெற்றியை ஆதரித்தபோது ஊழல் இல்லாத வினைத்திறனான நாட்டிற்காக தங்களின் விருப்பத்தினையும் வலுவான ஆதரவினையும் நாட்டு மக்கள் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் பற்றிய சம்பவங்களை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிப்பதன் ஊடாக குடிமக்களுக்கான கடமையை உரிய வகையில் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல் கலாசாரத்தில் இருந்து நாட்டை விடுவித்து ஒரு சிறந்த தேசத்தை அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.