மீண்டுவருகிறது உலகம்- எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் ஒபெக் நாடுகள்!

சந்தை நிலைமைகளைப் பொறுத்து அடுத்துவரும் மாதங்களில் எண்ணெய் உற்பத்தியை படிப்படியாக இரண்டு மில்லியன் பீப்பாய்கள் வரை அதிகரிக்கும் திட்டங்களை முன்னெடுக்க ஒபெக் நாடுகள் திட்டமிட்டுள்ளன.
ரஷ்யா தலைமையிலான ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகள் இதற்குத் தயாராகி வருவதாக ஒபெக் பொதுச் செயலாளர் முகமது பார்கிண்டோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய முடக்க நடவடிக்கைகளால் எரிபொருட்களுக்கான தேவை குறைவடைந்ததால் 2020ஆம் ஆண்டில் ஒபெக்+ உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஒபெக்+ முதலில் வெளியீட்டை 9.7 மில்லியன் பீப்பாய்களுக்கு குறைத்தது. பின்னர் 7.7 மில்லியனாகவும், இறுதியில் ஜனவரி முதல் 7.2 மில்லியனாகவும் குறைத்தது.
இந்நிலையில், உலகளாவிய பொருளாதாரம் 4.4% வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளதால், 2021ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் தேவை ஒன்பதாயிரத்து 219 மில்லியன் பீப்பாய்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி, உலகப் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தைகளில் நம்பிக்கையை செலுத்தியிருந்தாலும், கொரோனா பரவலுக்கு முன்னைய தேவை அளவுக்கு வராது என ஒபெக் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.