எதிர்க்கட்சித் தலைவருக்கும் பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு
In ஆசிரியர் தெரிவு November 13, 2020 7:59 am GMT 0 Comments 1814 by : Yuganthini

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கொரோனாவினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் அதனை வெற்றி கொள்வதற்கான சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி வழங்கும் என சாரா ஹல்டனிடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சி பேதங்களை கவனத்தில் கொள்ளாது, நவீன எதிர்க்கட்சியாக நாட்டின் மக்களுக்காக பணியாற்றுவோம் எனவும் சஜித் பிரேமதாச பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரிடம் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், அரசாங்கத்தின் சில குறைபாடுகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எதிர்க்கட்சியின் நோக்கம் எனவும் சஜித் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.