எதிர்வரும் வாரங்களில் கொவிட்-19 தொற்றுபரவல் அதிகரிக்கும்: ஜேர்மனியின் நோய்த் தடுப்பு மையம் எச்சரிக்கை

ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுபரவல் அதிகரிக்கும் என நோய்த் தடுப்பு மையமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை வைரஸ் தொற்றினால் ஏழு இலட்சத்து 72ஆயிரத்து 822பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 12ஆயிரத்து 503பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்;டும் 23ஆயிரத்து 184பேர் பாதிக்கப்பட்டதோடு, 227பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.