எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட கொங்கோ- கினியாவுக்கு 15 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

கொடிய எபோலா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, கினியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கியுள்ளது.
இந்த 15 மில்லியன் டொலர் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது குறித்த விபரங்கள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும்.
கினியாவில் கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொங்கியுள்ளது. இதில் குறைந்தது மூன்று பேர் இறந்து நான்கு பேர் பாதிக்கப்பட்டனர்.
கொங்கோவில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் எபோலா வைரஸ் தொற்றினால், 2,220பேர் உயிரிழந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.