எப்-35 ரக 50 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

அதிநவீன எப்-35 ரக 50 போர் விமானங்களை ஐக்கிய அரபு அமீகரத்திற்கு விற்பனை செய்வதற்கு, அமெரிக்கா அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த போர் விமானங்களுடன், நவீன இராணுவ தொழில்நுட்பம் மற்றும் கருவிகளும் அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதற்காக இருநாடுகளும் இரண்டாயிரத்து 337 கோடி அமெரிக்க டொலர்கள் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
எப்-35 ரகமானது அடுத்த தலைமுறைக்கான நவீன போர் விமானமாகும். மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தை ரேடார் மற்றும் அதிநவீன உணரும் கருவிகளால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமானங்களை இலக்காக குறி வைத்து ஏவுகணை தக்குதல் நடத்த முடியாது.
இந்த விமானங்கள் அதிவிரைவாக செயல்பட்டு செங்குத்தாக மேலெழும்பி பறக்கக்கூடியது ஆகும். அதேபோல் ஒரு பறவை போல் செங்குத்தாக தரையிறங்க முடியும். மெக் ரக விமானங்களுக்கு இணையாக மணிக்கு 2 ஆயிரம் கி.மீ வேகம் வரை அதிவேகத்தில் பறக்கக்கூடியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.