எமது நிலங்கள் இராணுவத்தினர் வசம்: புத்தாண்டிலும் நாம் தெருவில் நிற்கிறோம் – கேப்பாப்புலவு மக்கள்
In இலங்கை April 14, 2019 10:16 am GMT 0 Comments 2261 by : Dhackshala
தமது பூர்வீக நிலங்களில் இராணுவத்தினர் புதுவருடத்தைக் கொண்டாடும் வேளையில், தாம் வீதியில் வாழ்வதாக கேப்பாப்புலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஓவ்வொரு புதுவருடத்திலும் தமது வீடுகளுக்குச் செல்வோம் என காத்திருந்து தற்போது 10 வருடங்களாக தாம் வீதியிலேயே காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்புலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 774ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுவருடத்திலும் புத்தாண்டை கொண்டாட முடியாது தெருவில் நிற்கும் துர்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தமது குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழ் தலைமைகள் வாக்கு கேட்டு தமது பகுதிகளுக்கு வரவேண்டாமென்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா