எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது – அடைக்கலநாதன்
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் எனவும் அவர்களின் தியாகம் அளப்பரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி திறப்பு விழாவில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “எங்களுடைய உறவுகள் மற்றும் உடமைகள் இல்லாமல் போயுள்ளன. ஆனால் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக இன்றைக்கும் எங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
பாடசாலைகளுக்கு நிகழ்வுகளுக்குச் செல்கின்ற போது நான் ஆசிரியர் சமூகத்தை மகிழ்ச்சியுன் நினைத்துப் பார்ப்பதுண்டு. குடும்பப் பொறுப்பு அவர்கள் மத்தியில் இருக்கின்ற போதும் அதனை ஒருபுறம் வைத்துவிட்டு தமக்கு கொடுக்கப்படுகின்ற பொறுப்புக்களை திறம்படச் செய்து முடிக்கின்றனர்.
தங்களிடம் அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்றனர். இந்த சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மான
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய
-
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும் என இலங்கைத் தொழிலாளர் காங்க
-
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளத
-
இலங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் வலியுறுத்திய
-
தம்மிகவின் பாணியை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெ
-
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன
-
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை பொது வ