எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராதவர்களே நான் அவர் மடியில் வளர்ந்தவன் – கமல் ருவிட்
In இந்தியா December 15, 2020 9:59 am GMT 0 Comments 1542 by : Dhackshala

எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன், நினைவிருக்கட்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் உடனான காணொலியொன்றை ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், ‘புரட்சித் தலைவர் தி.மு.க.வில் இருந்தபோது தி.மு.க திலகம் அல்ல, தனிக்கட்சி தொடங்கிய பிறகு அ.தி.மு.க. திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும்_தடையல்ல’ என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசார நிகழ்ச்சியை தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் நேற்றுமுன்தினம் மதுரையில் ஆரம்பித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் 2வது நாளான நேற்று கமல்ஹாசன் தேனியில் தனது பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று அவர் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.