எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரை கொண்டிருக்கிறார்கள்: ராகுல் காந்தி
In இந்தியா April 14, 2019 7:04 am GMT 0 Comments 2108 by : adminsrilanka

நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரை கொண்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் இதுபோல எத்தனை மோடிகள் வருவார்களோ தமக்கு தெரியாது என்றும் கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்ளிட்ட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பிரதமர் எனும் இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.
ரபேல் விவகாரத்தில் காவலாளி நிச்சயம் திருடர்தான். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று கூறியதை, அமித்ஷா தேர்தலுக்காக கூறிய கதையென கூறுகிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.