எல்லை விவகாரம்: பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம்
In இந்தியா November 15, 2020 3:27 am GMT 0 Comments 1440 by : Yuganthini

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் பீரங்கித் தாக்குதலிலும் பொதுமக்கள் மற்றும் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் இராணுவத்தால் அப்பாவி மக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லையில் அமைதியைக் குலைக்கவும் ஜம்மு காஷ்மீரில் வன்முறையைத் தூண்டவும் பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்டு செயற்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.