ஏனைய நாடுகளின் முடிவைப் பொறுத்தே கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவோம் – தென்கொரியா
In உலகம் December 10, 2020 3:40 am GMT 0 Comments 1367 by : Dhackshala

கொரோனா தடுப்பூசியை தங்கள் மக்களுக்கு செலுத்துவது குறித்து ஏனைய நாடுகளின் முடிவைப் பொறுத்தே தீர்மானிக்கவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் சுங் சைக்யூன் கூறுகையில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பிரித்தானியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்த அனுமதித்து வருகின்றன.
எங்கள் அரசை பொறுத்தவரை எங்கள் குடிமக்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஏனைய நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகளின் முடிவுகளை ஆராய்ந்து வருகிறோம்.
அதனை தொடர்ந்து எங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்வோம். நாங்கள் இதில் கவனமாக இருக்கிறோம்’ என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியா, அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்த போதிலும் தற்போது அங்கு கொரோனா வைரஸின் 2ஆவது அலை பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.