ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் பனிமூட்டம்: வாகன சாரதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், டுபாய் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் அல் அஜ்பான் மற்றும் மதினத் ஜாயித் ஆகிய இடங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது.
டுபாயில் ஷேக் ஜாயித் சாலை, இ-311 ஷேக் முகம்மது பின் ஜாயித் வீதி, எமிரேட்ஸ் வீதி மற்றும் இ-66 டுபாய் அல் அய்ன் வீதி ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் அடர்த்தியாக வெகு நேரம் காணப்பட்டது.
இதன் காரணமாக டுபாய் பொலிஸார் வீதியில் செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
பனிமூட்டம் காரணமாக வீதியில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.